கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் சிம்பிளான உணவுகள்: தினமும் சாப்பிடுங்க

Sripriya Sambathkumar
Aug 22,2024
';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் எளிமையான, ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ஓட்ஸ்

இதில் அதிகம் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இது காலை உணவுக்கு ஏற்றது.

';

பூண்டு

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் அலிசின் பூண்டில் உள்ளது. தினமும் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

';

பாதாம்

மோனோசேசுரேடட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை பாதாமில் உள்ளன. இது எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.

';

ஆளிவிதைகள்

ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இவை கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இது ஒடுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

';

வெந்தயம்

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

';

கீரை வகைகள்

பாலக் போன்ற கீரை வகைகளில் லூடீன் உள்ளது. இது தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் ஒட்டிக்கொள்வதை தவிர்க்கிறது. பாலக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story