வியர்வை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளால் உடலில் திரவம் குறைந்து போகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்துபோனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது
நீர்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் அரிசிக் கஞ்சி முக்கியமானது. நாம் வழக்கமாக செய்யும் அரிசி சாததில் இருந்து வடிக்கப்படும் கஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அரிசியை சாதமாக சமைக்கும்போது அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கஞ்சியுடன் ஊறுகாய் அல்லது சின்ன வெங்காயம் இருந்தால் போதும், வயிற்று பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்ளலாம்
கஞ்சி வகைகளில் ராகிக் கஞ்சி ஊட்டச்சத்து மிகுந்தது. ராகியில் உள்ள நார்ச்சத்து மட்டுமல்ல, அதிலுள்ள எண்ணற்ற ஊட்டசச்த்துக்கள் வயிற்று பிரச்சனைகள், மலச்சிக்கல் என பல பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
கஞ்சிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதும், மிகவும் ஊட்டச்சத்து மிக்கதுமான கம்பங்கூழ் பல பெயர்களால் அறியப்படுகிறது. கம்பை நன்றாக வேகவைத்து அது நன்றாக வெந்தவுடன், அதில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து குடித்தால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் அண்டாது
அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் தண்ணீரில் இஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்த இஞ்சி டீயை உட்கொள்ளலாம்
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட மஞ்சள், வயிற்று வீக்கத்தைக் குறைக்கவும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை குறைக்க உதவும். உணவில் மஞ்சள் சேர்ப்பது ஒருபுறம் என்றால், பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது.
வயிற்று பிரச்சனை எதுவாக இருந்தாலும், அதற்கு சரியான மருந்து சீரகம். சீரகத்தை உணவில் சேர்ப்பதைத் தவிர, வழக்கமாக குடிக்கும் தண்ணீரிலேயே சீரகத்தை சேர்த்து குடிக்க வைத்து வந்தாலே உடல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் சீராகும்
செரிமானப் பிரச்சனைகளைப் போக்க, புதினா டீ அற்புதமான நன்மைகளைச் செய்யும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை