முகத்தில் கூடுதல் கொழுப்பு இருப்பது முக அழகை பாதிக்கும். கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிக அளவில் சேரும் போது ‘இரட்டை கன்னம்’ உண்டாகி முக அழகைக் கெடுக்கும்.
முகம் மற்றும் தாடைக்கான சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கொழுப்ப்பு குறைந்து அழகான தாடை வடிவத்தை மீண்டும் பெறலாம்.
முகத்திற்கான மசாஜ் செய்து கொல்வதன் மூலம் தசைகள் வலுவாகி தாடை அழகான வடிவம் பெறுவதுடன், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
கழுத்திற்கான பயிற்சிகளும் முக தசைகளை வலுவாக்கி இரட்டை கன்னத்தை நீக்கும்.
குறைந்த காலோரிகளையும் நல்ல சத்துக்களையும் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்ப்பது அவசியம். நீர் சத்து
அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நீர் சத்து இழக்காமல் இருப்பதோடு, சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
தூக்கமின்மையால்,கார்டிசோலின் அளவு, அதாவது ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதனால் உடல், முகத்தில் கொழுப்பு அதிகரிக்கலாம். 6 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் உடலில் நீர் தேங்குவதை தடுக்கிறது.
அழகான தாடையை பெற உட்காரும் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனாலும் தாடை அழகான வடிவத்தை பெறும்.
மருத்துவ முறையில் தீர்வு காண விரும்பினால், சரும மருத்துவரை அணுகி தேவையான அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.