முடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தய விதைகளில் புரதங்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளன
வெந்தய விதைகளில் லெசித்தின் நிறைந்துள்ளதால் இது முடி உதிர்வதைத் தடுக்கிறது.
வெந்தய விதைகளில் புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காணப்படுவதால் இவை சேதமடைந்த முடியை சரிசெய்கிறது.
வெந்தய விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது பொடுகுத் தொற்றைத் தடுக்கிறது.
வெந்தயத்தில் வறட்சி மற்றும் பொடுகுத் தொற்றைத் தடுத்து முடியை பளப்பளப்பாக வைக்க உதவுகிறது.
வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
2 தேக்கரண்டி வெந்தய விதைகளை தண்ணீரில் கழுவி ஒரு கிண்ணத்தில் வைத்து 2 கப் தண்ணீரைச் சேர்த்து ஒரே இரவில் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி அந்த நீரை முடிக்கு பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.