காலை எழுந்தவுடன் எகிறும் சுகர் லெவலை கடுப்படுத்த இதை செய்தால் போதும்

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவிலும் வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் செலுத்தி இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேணும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் உடலில் இன்னும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பிற நோய்களுக்கு வழிவகுக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

சர்க்கரை அளவு

பொதுவாக காலை எழுந்தவுடன் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுண்டு. இதை கட்டுப்படுத்துவதற்கான இயற்கையான வழிகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்பவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆகையால், நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங் அல்லது கார்டியோ உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

இரவு உணவு

இரவில் தாமதமாக உணவு உட்கொண்டால், காலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரவில் வெகுநேரம் கண்விழிக்கும் பழக்கம் இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

தூக்கம்

இரவு உணவு உட்கொண்ட பிறகு 2-3 மணி நேரத்திற்கு பிறகே தூங்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

எடை இழப்பு

உடல் பருமனும் காலை வேளையில் திடீரென இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க காரணமாக உள்ளது. காலையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எடையைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 04, 2024

VIEW ALL

Read Next Story