சுகர் நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை மட்டுமே இவர்கள் உட்கொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பலவித சத்தான காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி சாற்றில் கிளைசிமிக் குறியீடு குறைவாக இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
கிரீன் டீயில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை இன்சுலின் அளவுகளை மேம்படுத்த உதவும். கிரீன் டீ சுகர் நோயாளிகளுக்கு நல்லது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினகரை கலந்து குடிப்பது சுகர் அளவை குறைப்பதோடு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது. எனினும் இதன் அளவுகளில் கவனமாக இருப்பது அவசியம்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. குறைந்த கலோரி கொண்ட இஞ்சி தேநீர் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும்.
தக்காளி சாற்றின் கிளைசிமிக் குறியீடு மிகவும் குறைவு. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.