தாமரை விதையில் வியக்கத் தக்க வைகையில் ஆரோக்கிய நலன்கள் பொதிந்து இருப்பதால், அதனை சூப்பர் புட் எனலாம்
எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
தாமரை விதை ஆற்றலை அள்ளித் தரக் கூடியது. விரதத்தின் போது இதனை உட்கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணம் இது தான்.
தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.
அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ள தாமரை விதை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.
தாமரை விதைகளில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளதால், அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்கள் சேர்க்கப்படுகின்றன.
நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஏற்படுத்தும் தாமரை விதை அமைதியின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பாரம்பர்ய சிகிச்சைகளில் யன்படுத்தப் படுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.