மூல நோய் முதல் மலக்குடல் பிரச்சனை வரை... முருங்கைக்காய் நன்மைகள்...!

S.Karthikeyan
Dec 25,2024
';


முருங்கைக்காயில் சத்துக்கள் நிறைய உள்ளன. இதிலுள்ள பொட்டாசியச்சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம்.. முருங்கையிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானது.

';


முருங்கையிலுள்ள கால்சியம், பாலைவிட 4 மடங்கு அதிகம். முருங்கையிலுள்ள வைட்டமின் C, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகம். கீரைகளில் இருப்பதைவிட, முருங்கையில் இரும்புச்சத்துக்கள் அதிகம்.

';


இத்தனை சத்துக்களும் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு முருங்கைக்காய்களை தவறாமல் உணவில் தர வேண்டும். இதனால் எலும்புகள், பற்கள் வலிமையும் கூடு

';


முருங்கையின் விதைகளை குழந்தைகளுக்கு தரும்போது, மலக்குடல்களிலுள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். எனவே, இந்த விதைகளை மட்டுமே வைத்து அல்வா, சூப் உள்ளிட்டவைகளை செய்து தரலாம்.

';


அதேபோல, முருங்கைக்காயை வேக வைத்து, அதிலுள்ள சதைகளை எடுத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்து தரலாம். ஃப்ரைடு ரைஸ்களிலும் முருங்கை விதை விழுதுகளை சேர்த்து தயாரிக்கலாம்.

';


இதிலுள்ள இரும்புச்சத்து உடலை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கித்தரும். எனவே மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இந்த முருங்கை தவிர்க்க முடியாத ஒன்று.

';


நீர்ச்சத்து நிறைந்த முருங்கைக்காய்கள், உடலில் ஏற்படும் திரவ இழப்பை சீராக்குகிறது.. இதனால் உடலில் உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சி கிடைக்கும். அதனால்தான், மூலநோயாளிகளை உணவில் முருங்கையை அதிகம் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.

';


மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கும் இந்த முருங்கைக்காய் சிறந்த உணவு.

';


நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்க்க வேண்டியது இந்த முருங்கை காய்களைதான்.. இதனால் ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story