உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், மூட்டு வலி, சிறுநீரக கற்கள், கீல்வாதம் போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.
யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் சில இயற்கையான வழிகள் பற்றி இங்கே காணலாம்.
வைட்டமின் சி யூரிக் அமில அளவை குறைத்து, மூட்டு வலியையும் கட்டுக்குள் வைப்பதால், வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது நல்லது.
பார்லி, தினை, மக்காச்சோளம் போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது யூரிக் அமிலத்தை நீக்குவதில் சிறுநீரகங்கள் சரியாக செயல்பட உதவும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படுவதோடு யூரிக் அமிலமும் அவ்வப்போது உடலை விட்டி வெளியேறுகிறது.
கிரீன் டீ குடிப்பதால் யூரிக் அமிலம் அதிகரிக்கும் அபாயம் குறைகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைக்கவும், மூட்டு வலியை குறைக்கவும் உதவுகின்றன.
யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் செர்ரி பழங்களை உட்கொள்ளலாம். செர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.