இரும்பு சத்து குறைபாடு இருந்தால், அதீத சோர்வு மற்றும் மந்தமான உணர்வு இருக்கும் இதை தவிர்க்க இரும்பு சத்து கொண்ட உணவுகள் அவசியம்.
இரும்பு சத்து என்றதும் நம் நினைவுக்கு வருவது கீரை. ஆனால் கீரையை விட அதிக இரும்பு சத்து கொண்ட உணவுகள் உள்ளன.
எள்ளு விதைகளில் கீரையை விட அதிக இரும்பு சத்துடன் ஆக்சிஜனேற்று மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
பருப்பு வகைகளில் புரதம் அதிகம் உள்ளது என்பது அனைவரும் தெரிந்தது தான் தான். ஆனால் இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது என்று பலருக்கு தெரிவதில்லை.
பூசணி விதைகளில் இரும்பு சத்துடன், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது.
கோக்கோ அதிகம் உள்ள டார்க் சாக்லேட் இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸி ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு
பசையும் இல்லாத தானியமாக குயினோவாவில், இரும்பு சத்து அதிகம் உள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.