கர்ப்பகாலம்

பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு போன்றது. கர்ப்பகாலம் பெண்மையின் முக்கியமான காலகட்டம் என்றே சொல்லலாம்.

Sripriya Sambathkumar
Feb 08,2023
';

சுகப்பிரசவம்

சுகப்பிரசவம் ஆவதற்கு சில உணவு முறைகளை பின்பற்றினால் போதும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

';

காய்கறிகள், கீரைகள்:

பாலக்கீரை, மலபார் கீரை, வெந்தய கீரை, முருங்கை கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, செலரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் என பல்வேறு வகையான கீரைகளை சாப்பிடவேண்டும்.

';

பீட்ரூட்

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் பீட்ரூட்டில் கிடைக்கிறது.

';

தயிர்

தினமும் தயிர் சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு உறுதியான எலும்புகள் உருவாகும். இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. பாலை விட தயிரில் தான் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது.

';

ஆப்பிள்

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்துக்கு நிவாரணம் அளிக்கும்.

';

வாழைப்பழம்

இதில் இரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான பொட்டாசியம் அதிகமாக உள்ளது.

';

முலாம்பழம்

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களிலிருந்து இது பாதுகாக்கும். இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன.

';

சிட்ரஸ் பழங்கள்

தோல் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கும், கரு மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் தேவையான வைட்டமின் சி இப்பழங்களில் உள்ளன.

';

நெல்லிக்காய்

இது உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வைத் தடுக்கிறது. நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கிறது.

';

கவனம் தேவை

கர்ப்ப காலத்தில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால், எந்த வித உணவுமுறையை பின்பற்றுவதற்கு முன்னரும், அது உங்களுக்கு ஏற்றதா என மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story