முடியின் வேர்க்கால்கள் உறுதியாக இருந்தால் தான் தலைமுடி அடர்த்தியாக இருக்கும். இன்று 99 சதவிதத்தினருக்கு முடி உதிர்தல் முதல் தலை அழகு தொடர்பான பல பிரச்சனைகள் இருக்கின்றன.
முடி ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் நமது உணவில் ஏன் இருக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும் மிக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் ஏ, நமது உடலின் செல் வளர்ச்சிக்கும் முடி உருவாவதற்கும் அவசியமானது ஆகும்.
அனைத்து பி வைட்டமின்களும் முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. வைட்டமின் B1, B2, B3, B5, B6, B12, B7, B9 என அனைத்துமே கூந்தல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். வைட்டமின் பி குறைபாடு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. முடி அடர்த்தியாக மட்டுமல்ல பளபளப்பாக பொலிவுடன் இருக்க வைட்டமின் சி அவசியமானது ஆகும்
முடி உதிர்தலுக்கு வைட்டமின் டி குறைபாடு வழிவகுக்கும். எனவே தினசரி வெயிலில் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தவும் சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி முக்கியமானது. தேவைப்பட்டால் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்
ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. தலைமுடியின் பொலிவு, மிருதுத்தன்மை, பளபளப்பு என கூந்தல் அழகுக்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியமானது.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் முடி குறைவாக இருப்பது பிரச்சனை தான்...