யூரிக் அமிலத்தை யூ-டர்ண் எடுத்து ஓட வைக்கும் சில அற்புத உணவுகள்

Sripriya Sambathkumar
Aug 15,2024
';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அதனால், மூட்டு வலி, சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

';

உணவுகள்

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில அத்தியாவசிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

வாழைப்பழம்

வாழைப் பழத்தில் ப்யூரின் அளவு மிகவும் குறைவாக இருக்கின்றது. ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் இதை உட்கொள்ளலாம்.

';

எலுமிச்சை சாறு

வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை சாறு யூரிக் அமில நோயாளிகளுக்கு சிறந்த பானமாக கருதப்படுகின்றது.

';

தயிர்

குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தயிர் ஆகியவை யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கின்றது.

';

உலர் பழங்கள்

உலர் பழங்கள் மற்றும் விதைகளில் மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய், எலுமிச்சை, சாத்துக்குடி, பப்பாளி, அன்னாசிப்பழம் போன்ற புளிப்பு பழங்கள் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story