யூரிக் அமில நோயாளிகள் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைத்து மூட்டு வலியை குறைக்க உதவும் சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவ்வப்போது யூரிக் அமிலத்தை உடலை விட்டு வெளியேற்றுவதில் உதவி புரியும்.
வைட்டமின் சி யூரிக் அமில அளவை குறைத்து, மூட்டு வலியையும் கட்டுக்குள் வைப்பதால், வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது நல்லது.
யோகாசனம், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்ற ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது யூரிக் அமில அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கால்சியம் அதிகம் உள்ள, குறைவான கொழுப்புள்ள பால், தயிர் ஆகியவை யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.
யூரிக் அமில அளவை குறைக்க ஓட்ஸ், பிரவுன் ரைஸ், பார்லி போன்ற முழு தானியங்களை உட்கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து அதிகமாகவும் பியூரின் அளவு குறைவாகவும் இருப்பதால், இவை யூரிக் அமில நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக பார்க்கப்படுகின்றன.
செர்ரி பழங்களில் பியூரின் அளவு குறைவாக உள்ளது. இவை யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.