பித்தளை பாத்திரங்கள் 10 நிமிடங்களில் தங்கம் போல் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ
நம் நாட்டில் இன்னும் பித்தளை பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பித்தளை பாத்திரங்களில் உணவு உண்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
இந்த பாத்திரங்களில் சாப்பிடும்போது கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், நேரடியாக உடலுக்குள் சென்று கிரகித்துக் கொள்ளப்படுகிறது என சொல்லப்படுகிறது.
பல குடும்பங்களில் ஆடம்பரத்தைக் காட்ட பித்தளைப் பாத்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு பித்தளை பாத்திரங்களில் உணவு பரிமாறப்படுகிறது.
பல வீடுகளில் பித்தளையில் கடவுள் சிலைகள் கூட வைத்திருப்பார்கள். ஆனால் காலப்போக்கில், பித்தளை பாத்திரங்கள் ஜொலிப்பு மங்கிவிடும். சில நேரத்தில் முற்றிலும் கருப்பு நிறமாக மாறும்.
அவற்றை சுத்தம் செய்வது எப்படி என நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் இந்த கிளீனிங் டிப்ஸை பின்பற்றுங்கள். உங்கள் பித்தளை பாத்திரங்கள் மீண்டும் தங்கம் போல் ஜொலிக்கும்.
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கருப்பு அல்லது கறை படிந்த பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய சிறந்தது. எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை சம அளவில் எடுத்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
இப்போது அதை பாத்திரத்தில் தடவி அரை மணி நேரம் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் பாத்திரங்கள் பிரகாசமாக மாறும் மற்றும் கறைகள் இருக்காது.
பித்தளை பாத்திரங்களில் உள்ள கறைகளை நீக்க மாவு மற்றும் வினிகரையும் பயன்படுத்தலாம். இதற்கு சம அளவு மாவு மற்றும் வினிகர் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். பாத்திரங்களில் 15-20 நிமிடங்கள் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பாத்திரங்கள் ஜொலிக்கும்.