உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமிப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல்.
ஆரோக்கியமான கல்லீரல் விரும்பினால், முடிந்தவரை சிவப்பு இறைச்சி, சோடா, குளிர்பானங்கள், ஆல்கஹால் மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்.
தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதாவை சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அஜினோமோட்டோ பயன்படுகிறது. இதனால் உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.
சிலருக்கு பகலில் தூங்கும் கெட்ட பழக்கம் உள்ளது. பகலில் அதிகமாக தூங்கினால் அது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிலர் மிகவும் தாமதமாக தூங்குவார்கள். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறைந்தது 10 மணிக்கு தூங்க செல்வது நல்லது
கோபத்தைக் கட்டுப்படுத்துவது மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நல்ல கல்லீரல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் முக்கியமானது.
எங்கள் கட்டுரை தகவலை வழங்க மட்டுமே. மேலும் தகவலுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.