சம்மரில் யூரிக் அமில அளவை அசால்டாய் கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான பானங்கள்

';

யூரிக் அமிலம்

கோடை காலத்தில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க குடிக்க வேண்டிய சில சூப்பர் பானங்கள் பற்றி இங்கே காணலாம்

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் யூரிக் அமில படிகங்களை கரைக்க உதவும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

';

ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுவதோடு செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. உணவு உட்கொள்ளும் முன் இதை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிப்பது நல்லது.

';

செர்ரி சாறு

செர்ரியில் வீக்கத்தைக் குறைக்கும் பண்புக்ளும் யூரிக் அமில அளவைக் குறைக்கும் கூறுகள் உள்ளன. இது கீல்வாத வலிக்கும் நிவாரணமாக அமைகின்றது.

';

இஞ்சி தேநீர்

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் கீல்வாதத்தால் ஏற்படும் வலியைக் குறைக்கவும் உதவும். இஞ்சி துண்டுகளை 5 முதல் 10 நிமிடங்கள் சூடான நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இதனுடன் தேன் அல்லது எலுமிச்சை சேர்க்கலாம்.

';

வெள்ளரி சாறு

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கவும், யூரிக் அமிலம் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது.

';

தர்பூசணி சாறு

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் சிட்ருலின் போன்ற கூறுகள் உள்ளன, இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story