உடல் எடை அதிகரித்தால், உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகையால் அதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.
தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க்க உதவும் மசாலா பொருட்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சள் உடல் எடையை குறைப்பதில் வேகமாக வேலை செய்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆண்டி-ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும் இது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
இஞ்சி பலவித நோய்களுக்கு நிவாரணமாக அமைகின்றது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
தினமும் சீரகத்தை உட்கொள்வது செரிமான செய்முறை சீராக்குகின்றது. சீரகத் தண்ணீர் உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து உட்கொள்வதால் தொப்பை கொழுப்பு குறைந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சத்தியையும் அதிகரிக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.