கல்லீரலில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

';

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது அண்மைக்காலமாக பொதுவெளியில் அதிகம் பேசப்படுகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் இத்தகைய பாதிப்புகள் வருகின்றன. இதனை தவிர்க்கவோ அல்லது மீள முயற்சி செய்ய நினைத்தால், இங்கே இருக்கும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுங்கள்.

';

மூன்று வகையான உடற்பயிற்சிகள் கொழுப்பு கல்லீரலில் நன்மை பயக்கும். ஏரோபிக் உடற்பயிற்சி, ரெஸிட்டென்ட் பயிற்சி, அதிக தீவிர இடைவெளி பயிற்சி. இதில் ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் மேற்கொள்ளுங்கள்.

';

மோசமான தூக்கம், போதிய தூக்கமின்மை (< 6h), மறுசீரமைக்கப்படாத தூக்கம் மற்றும் பகல்நேரத் தூக்கம் > 60 நிமிடங்கள் ஆகியவை அனைத்தும் மோசமான கொழுப்பு கல்லீரல் நோயுடன் நேரடி தொடர்பு கொண்டது. நீங்கள் வழக்கமான ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறுவது கட்டாயம். இது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது

';

கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்புகள் சார்ந்த டையட்டைக் காட்டிலும் குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து டையட்டில் ஆரோக்கியமான மற்றும் குறைவான கலோரி உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

';

காபி எடுத்துக் கொள்வது கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு சிறந்தது. சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் வெறுமனே இருக்கும் பிளாக் காபியை நீங்கள் தினமும் மாலைக்குள் 3 கப் குடிக்கலாம். இது ரத்த அழுத்தத்தை பாதிக்காது.

';

சர்க்கரை - இனிப்பு மற்றும் பதப்பபடுத்தப்பட்ட உணவுகளில் இருந்து நீங்கள் முழுமையாக விலகி இருங்கள். இவை கல்லீரல் கொழுப்பை பெருமளவில் அதிகரிக்கலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே காணப்படும் கொழுப்பு கல்லீரலுக்கு இவை பிரதான காரணமாக இருக்கின்றன. அதேபோல் செயற்கை இனிப்பூட்டிகளையும் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.

';

கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு மிகவும் பொதுவான காரணம் மது அருந்துதல் ஆகும். கொழுப்பு கல்லீரலைத் தடுப்பதில் பாதுகாப்பான ஆல்கஹால் அளவு ஜீரோ ஆகும். மது அருந்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மது அல்லாத ஆல்கஹால் போன்ற குறைந்த கலோரி பானங்களுக்கு மாறவும்.

';

VIEW ALL

Read Next Story