உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும். சரியான அளவு உப்பு உணவின் சுவையை அதிகரிக்கும்.
அதே சமயம் அளவிற்கு அதிகமான உப்பு உட்கொள்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என WHO முதல் உள்ளூர் மருத்துவர்கள் வரை எச்சரிக்கின்றனர்.
உப்பில் சோடியம் உள்ளதால், அளவிற்கு அதிகமாகும் போது, உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற அபாயம் அதிகரிக்கும்
அதிக உப்பு உட்கொள்வது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால், சிறுநீரக செயலிழப்பு அபாயம் அதிகரிக்கிறது.
உடலில் அதிகப்படியான சோடியம், எலும்புகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி, எலும்பு பலவீனம், மூட்டு வலி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும்.
அதிகப்படியான சோடியம் தூக்கமின்மை பிரச்சினை, நினைவாற்றல் குறைதல், மனநல பிரச்சனை, டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
ஆரோக்கியமான நபருக்கு நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பு, ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் உப்புக்கு மேல் சாப்பிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சிப்ஸ், ஜங்க் ஃபுட் மற்றும் ஊறுகாய்கள் போன்றவற்றில் அதிக உப்பை உள்ளதால், அளவிற்கு அதிகமாக இதனை சாப்பிடுவது பெரும் தீங்கு விளைவிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.