நீரிழிவு நோய் ஒரு தீவிர நோயாகும். இது உலகம் முழுவதும் ஏகப்பட்ட நபர்களை பாதித்துள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் 5 உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆண்டி-ஆக்சிடெண்டான இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைத்து இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அல்லது பொடி செய்து சாப்பிடலாம்.
ஆண்டி-ஆக்சிடெண்டான கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கறிவேப்பிலையை தினமும் சமையலில் சேர்ப்பது நல்லது.
மஞ்சள் ஒரு அழற்சி எதிர்ப்பு மருந்தாகும். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.