மூளை இளமையாக இருக்க வேண்டுமா?

';

மூளை ஆரோக்கியம்

அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்ய, மூளை ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் அவசியம். நமது சில பழக்கவழக்கங்களால், மூளை முன்கூட்டியே முதுமையடைந்துவிடுகிறது

';

மூளை இளமை

உங்கள் மூளை இளமையாக இருக்க வேண்டுமா? சில விஷயங்களில் கவனம் வைத்துக் கொண்டால் மூளை முதிர்ச்சி அடைவது தள்ளி போடப்படும்... அவை இவை தான்...

';

உணவு

சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது மூளையையும் பாதிக்கிறது. எனவே, மதியம், இரவு மற்றும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், சரியான நேரத்தில் உணவு உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளவும்

';

மன அழுத்தம்

மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மனதை இலகுவாக்கும் விஷயங்களை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்

';

தூக்கம்

தினசரி இரவு உறக்கம் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமானது. குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேர தூக்கம் மூளைக்கு மிகவும் அவசியம். இதை விட குறைவாக தூங்குவது மூளையை பாதிக்கிறது

';

உடல் உழைப்பு

மூளையில் ரத்த ஓட்டம் சரியாக சீராக இருக்க வேண்டுமானால், உடல் உழைப்பு அவசியம். உடலின் இயக்கம் குறைந்துபோனால், மூளை சரியாக இயங்காது.

';

புகைபிடித்தல்

மூளையில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் புகைபிடிக்கும் பழக்கம், மூளையை மழுங்கச் செய்துவிடும். எனவே, புகைபிடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

';

ஊட்டச்சத்து

உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், உங்கள் மூளை சரியாக இயங்காது. உங்கள் மூளை சீராக செயல்பட வேண்டுமெனில், உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

';

பானங்கள்

அதிகமாக மது அருந்துவது மட்டுமல்ல, காபி மற்றும் தேநீரும் அதிகமாக அருந்தினால், அது உங்கள் மூளையை பாதிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story