மொபைலில் அதிக விளம்பரங்களா? தடுக்க டிப்ஸ்
மொபைலில் அதிகம் விளம்பரங்கள் தோன்றுவது நமக்கு எரிச்சலூட்டும்.
சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் யூட்யூபில் விளம்பரங்களை தவிர்ப்பதற்கு பல அம்சங்கள் உள்ளது.
ஆனால் இப்போது வரும் பல ஆண்ட்ராய்டு போன்களில் நேரடியாக விளம்பரங்கள் வந்து சிரமப்படுத்துகின்றது.
இத்தகைய தேவையில்லாத விளம்பரங்களால், நமக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
இந்த விளம்பரங்களை எப்படி தடுப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
போனில் வரும் விளம்பரங்களை தடுப்பதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லுங்கள். அதில் கூகுள் செயலியை தொடவும்.
பின்னர் மேனேஜ் கூகுள் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, டேட்டா அண்ட் பிரைவசி ஆப்ஷனுக்குள் செல்லவும்.
அதில் கீழே ஸ்க்ரோல் செய்து பார்த்தால், Personalized Ads எனத் தோன்றும்.
அதன் உள்ளே சென்றால் நீங்கள் எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுகிறீர்கள், எதுபோன்ற விளம்பரங்கள் தோன்றுகிறது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
Personalized Ads கீழே இருக்கும் My Ad Centre என்பதை கிளிக் செய்தால், Personalized Ads-ஐ ஆப் செய்ய முடியும்.
அதன் பிறகு வெளியே வந்து மீண்டும் செட்டிங்ஸ் பகுதிக்குள் கூகுளை கிளிக் செய்து, Delete Advertising ID என்பதை கிளிக் செய்து நீக்கினால், இனி உங்கள் போனுக்கு எவ்விதமான விளம்பரங்களும் வராது.
நீங்களும் உங்கள் ஸ்மார்ட்போனை சங்கடமின்றி பயன்படுத்தலாம்.
இந்த முறையைப் பின்பற்றி உடனடியாக உங்கள் சாதனத்திற்கு தேவையில்லாமல் வரும் விளம்பரங்களை நீக்குங்கள்.