தயிர் அல்லது யோகர்ட் போதுமான அளவு துத்தநாகத்தை வழங்குகிறது. ஒரு கப் தயிர் அல்லது யோகார்ட்டில் 1.5 மி.கி துத்தநாகம் உள்ளது.
பூசணி விதைகள் எண்ணற்ற உணவுகளில் சேர்க்கப்படும். ஒரு கப் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்து மற்றும் 8.5 மி.கி தாவர அடிப்படையிலான புரதங்கள் அடங்கி உள்ளன.
பயறு வகைகள் துத்தநாகத்தின் சிறந்த மூலம். ஒரு கப் பயறு வகைகளில் கிட்டத்தட்ட 4.7 மி.கி துத்தநாகம் உள்ளது. கறி வடிவில் வழக்கமான உணவில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.
கொண்டைக் கடலையில், துத்தநாகம் மட்டுமின்றி இரும்புச்சத்து, சோடியம், போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன. ஒரு கப் வேக வைத்த கொண்டைக்கடலையில் 2.5 மி.கி துத்தநாகம் உள்ளது.
இயற்கையான, தாவர அடிப்படையிலான துத்தநாக சத்தை பெற முந்திரி உதவுகிறது. முந்திரியை நீங்கள் அப்படியே அல்லது வறுத்து சாப்பிட்டால், உடலுக்கு சுமார் 1.5 மி.கி துத்தநாகம் கிடைக்கும்.
00 கிராம் டார்க் சாக்லேட்டில் 3.3 மி.கி துத்தநாகம் உள்ளது. ஆனால் டார்க் சாக்லேட்டில் கலோரிகள் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது.
சணல் விதைகள் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலம். இதில், நிறைவுறா கொழுப்புகள் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. சுமார் 3 டேபிள்ஸ்பூன் சணல் விதைகளில் 3 மி.கி வரை துத்தநாகம் உள்ளது.