பெண்கள் சந்திக்கும் கர்ப்ப கால பிரச்சனைகள் முதல், சிறு நீர் பாதை தொற்று வரை உடலின் பல பிரச்சனைகளுக்கு இளநீர் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது.
இளநீர் ஒரு டையூரிடிக் என்று கருதப்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வும் தோன்றும். இளநீர் இந்த சிக்கலை தீர்க்கிறது.
இளநீர் குடிப்பதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து சிறுநீர் எளிதாக வெளியேறும். இதனால் சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியா எளிதில் வெளியேற்றப்படுகிறது.
பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படும் இளநீர், சிறுநீர் பாதை தொற்றின் போது உடலில் ஏற்படும் பலவீனத்தையும் குறைக்கிறது.
நீர் சத்து அதிகம் இருப்பதால், UTI தொற்றால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க இளநீர் உதவும்.
pH சமநிலையற்றதாக இருக்கும் போது, தொற்று பெருகத் தொடங்குகிறது. இளநீர் உள்ள எலக்ட்ரோலைட் அதிகரித்த pH அளவை சமன் செய்கிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.