Food For Bad Health: குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

குடல் ஆரோக்கியம்

உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்படியென்றால் குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள் இவை...

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

இனிப்புகள்

இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளும் தின்பண்டங்களும் குளிர்காலத்தில் செரிமானத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், உடல் எடையையும் அதிகரிக்கின்றன

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

டிரான்ஸ் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், அதிகப்படியான சோடியம், பிற ஆரோக்கியமற்ற சேர்க்கைகளால் பதப்படுத்தப்படும் உணவுகள், செரிமானத்தை கடினமாக்குகின்றன. இவை, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

பால் பொருட்கள்

ஆரோக்கியமான பால் பொருட்கள், குளிர்காலத்தில் செரிமானம் செய்ய நேரம் எடுக்கும். பால் குடித்தவுடன் வாயுத் தொல்லை, குடல் அசைவு, வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அதி உங்கள் உடலால் ஜீரணிக்க முடியவில்லை என்று பொருள்

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

காரம்

காரமான உணவுகள் குறிப்பாக சிவப்பு மிளகாய் பொடி சேர்த்த உணவுகள் வயிற்றுப்போக்கு, நீர் மலம், அஜீரணம் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்களில் சோடா உள்ளது, இது வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். அதேபோல, இனிப்பு கலந்த பானங்களையும் பருகுவதை தவிர்க்க வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

கொழுப்பு

குளிர்காலத்தில் செரிமான அமைப்பு ஏற்கனவே மெதுவாக இருக்கும் நிலையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை செரிமானம் செய்ய அதிக நேரம் ஆகும். அந்த நிலையில் கொழுப்பு உணவுகள் உடல் எடையை அதிகரித்துவிடும்

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jan 24, 2024

VIEW ALL

Read Next Story