புளிப்பு-இனிப்பு சுவையில் உள்ள பப்ளிமாஸ் பழம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்தது. எலுமிச்சை போல தோற்றமளிக்கும் ஆனால் சுவையில் ஆரஞ்சு பழத்தைப் போல இருக்கும்
பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பப்ளிமாஸ் பழம், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் அருமையான பழம்
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள பப்ளிமாஸ் பழம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் பழம். இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். தவிர, இன்சுலின் எதிர்ப்புப் பிரச்சனையையும் கட்டுப்படுத்தலாம்.
உடல் எடையை குறைக்க விரும்பினால், நார்ச்சத்து கொண்ட பப்ளிமாஸ் பழம், பசியைக் கட்டுப்படுத்தும் இந்த பழத்தின் வாசனை பசியை கட்டுப்படுத்தும்.
இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும், இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
செரிமான அமைப்பை பலப்படுத்த இதில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை