ரத்த சர்க்கரையைச் சமநிலையில் வைக்க இந்த 7 வகை க்ரீன் ஜூஸ் குடிக்கவும் !!
பார்ஸ்லேயில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் உள்ளன. பச்சை நிற திராட்சைப் பழத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவு. இது மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் உடலுக்கு நல்லது.
அவகாடோ பழத்தில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கும். பசலைக் கீரை உடலுக்குத் தேவைப்படும் முக்கியமான ஊட்டச் சத்துக்களைக் கொடுக்கிறது.
புதினா குடல் செரிமானமடைய உதவும், எலுமிச்சையில் வைட்டமின் C சத்து நிறைந்துள்ளது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கும்.
புரோக்கோலியில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது. க்ரூஸிஃபெரஸ் காய்கறி மற்றும் இஞ்சியில் இருக்கும் இன்சுலின் உடலில் சென்சிட்டிவிட்டி மேன்மையடைய உதவியாக இருக்கும்.
செலரியில் உள்ள அதிகளவு நீர்ச்சத்து நம் உடலை நீரேற்றத்துடன் வைத்துப் பாதுகாக்கும். க்ரீன் ஆப்பிளில் இயற்கையாகவே இனிப்புச் சத்தும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. இது செரிமானத்திற்கும், ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவும்.
வெள்ளரிக்காய் உடலை நீரேற்றத்துடன் வைத்து நச்சுக்களைக் கிருமிகளை வெளியேற்றும். பசலைக் கீரையில் அதிக ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது இது ரத்த அளவை சமநிலையில் வைக்க உதவும்.
காலேயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. எலுமிச்சை ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்து உடல் புத்துணர்ச்சி பெற உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.