சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நரம்புகளில் பரவும் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
குயினோவாவின் கிளைசெமிக் குறியீடு சுமார் 53 ஆக உள்ளது, இது ஒரு நடுத்தர ஜிஐ குறியீட்டு உணவாக அமைகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை ஆரோக்கியமாக வைத்து பலவீனத்தை நீக்குகிறது. இதை சாப்பிடுவதால் வயிறு நிரம்புவதுடன் எடை குறையவும் உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக, பெர்ரி உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது.