உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டி வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
பூண்டு உணவுக்கு சுவையைத் தருவதோடு, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
டார்க் சாக்லேட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. இவற்றில் உள்ள கோகோ பவுடர் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. அவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, குறைக்கின்றன
அவகேடோ சுவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலையும் நன்கு கட்டுப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
அசைவம் சாப்பிடுபவர்கள் கொழுப்பு நிறைந்த மீனை உணவில் சேர்த்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.