உணவில் மட்டுமல்ல, அப்படியேவும் சாப்பிட ஏற்றது தேங்காய். தேங்காயின் ஆரோக்கியமான குணநலன்கள் அனைவருக்கும் தெரிந்தது அதேபோல, தேங்காயின் உள்ளிருக்கும் நீரும் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டது
தேங்காய் இளசாக இருக்கும்போது அதிலிருக்கும் தண்ணீரை குடித்தால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் நல்லது
இளநீரைப் போலவே, தேங்காயை உடைக்கும்போது கிடைக்கும் தண்ணீரும் இளநீரைப் போலவே சத்து மிக்கது. இளநீரும், தேங்காய் தண்ணீரும் சரும பராமரிப்புக்கு மிகவும் நல்லது
எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்டது உடலை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் தேங்காய் நீரை முகத்திற்கும் பயன்படுத்தலாம்
தேங்காய் நீரில் சுமார் 95% நீர்ச்சத்து உள்ளது, எனவே முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும். இது சருமத்தை மென்மையாக்குவதுடன், சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது
ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட தேங்காய் நீர் மற்றும் இளநீர் இரண்டுமே முகத்தில் ஏற்படும் மங்கு, வடு போன்றவற்றை குறைந்து சருமத்தை பளபளப்பாகும்
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட இளநீரும் தேங்காய் நீரும், பருக்கள் மற்றும் முகப்பருகள் ஏற்படுவதை தடுப்பதுடன், சருமத்துளைகள் அடைப்பை நீக்குகிறது மற்றும் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கிறது.
சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட இளநீர் சருமத்திற்கு ஊட்டமளித்து சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை