பொதுவாக காய்கறிகளை சாலட் வடிவில் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் சில உணவுகளையும் சில காய்கறிகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
குடைமிளகாயில் நாடா புழுக்கள், அதன் முட்டைகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இதை சமைத்து தான் சாப்பிட வேண்டும்.
முட்டை கோஸில் சால்மோநல்லா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
ப்ரோக்கோலியை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அதே சமயத்தில் அளவிற்கு அதிகமாக சமைப்பதாலும் சத்துக்கள் வீணாகிவிடும்.
காய்ச்சாத பாலில் உள்ள பாக்டீரியா சில சமயங்களில் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்
சிலருக்கு முட்டையை பச்சையாக சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் இதனால் தீவிர வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பீட்ரூட்டை சமைக்காமல் சாப்பிடுவதால், செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு கடுமையான வயிற்று வலி ஏற்படலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.