மூளை வளர்ச்சியை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு!

';

வைட்டமின் B12

மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு வைட்டமின் B12 மிக முக்கியம். உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் B12 தேவை.

';

ஊட்டச்சத்து குறைபாடு

கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், குழந்தை பிறக்கும் போது மூளை மற்றும் முதுகுத்தண்டில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

';

சோர்வு

உடலின் செல்கள் சரியாக செயல்பட பி12 தேவை. அதன் குறைபாடு உடலில் ஆக்ஸிஜன் அளவையும் பாதிக்கலாம். இதனால் சோர்வு உண்டாகும்.

';

தலைவலி

வைட்டமின் பி உடலில் குறையத் தொடங்கும் போது, ​​அது தலைவலி அதிகம் ஏற்படலாம். மேலும் நரம்பியல் சார்ந்த பக்க விளைவுகளும்அதிகரிக்கிறது.

';

குடல் பிரச்சினை

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

மஞ்சள் நிற சருமம்

வைட்டமின் குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதிப்பதால், இரத்த சோகையின் அறிகுறிகள் ஏற்படத் தொடங்குகின்றன. இரத்தம் குறைவதால், தோலின் நிறம் மாறுவதோடு மட்டுமல்லாமல், கண்களின் வெள்ளை நிறமும் மஞ்சள் நிறமாக மாறும்.

';

மன அழுத்தம்

வைட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால், மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

';


உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, தினசரி உணவில் இறைச்சி, மீன், கோழி, முட்டை, பால், தயிர், பன்னீர், சீஸ் போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story