உடல் எடையைக் குறைப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க நாம் சரியான உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
சில உணவுகளை இரவில் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜவ்வரிசி கிச்சடியை லேசான காலை உணவாகவோ இரவு உணவாகவோ சாப்பிடலாம். எடையைக் குறைக்க இது உதவும்.
ஓட்ஸ் இட்லி ஒரு நார்ச்சத்துள்ள உணவு. இது மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இருக்கும். காலை உணவு மற்றும் இரவு உணவு இரண்டிலும் இதை உண்ணலாம்.
பப்பாளியில் பப்பைன் எனப்படும் இயற்கையான செரிமான நொதி உள்ளது. இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற அறிகுறிகளை நீக்கி எடையைக் குறைக்க உதவுகின்றன.
பாதாமில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீங்கள் இரவில் பாதாம் சாப்பிட்டால், அது தசைகளை சரிசெய்யும்.
இரவில் பிரெட் மற்றும் பீனட் பட்டர் ஆகியவற்றை ஒன்றாக உட்கொண்டால், உங்கள் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு, அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறையும்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பி இருக்க உதவுகிறது. இதனால் இனிப்பு சாப்பிடும் ஆர்வமும் குறைகிறது.