பங்கனப்பள்ளி

ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் உள்ள பனகனப்பள்ளியைச் சேர்ந்த வகை இந்த மாம்பழம். தெலுங்கானாவிலும் இந்த ரகம் மிகவும் பிரபலமானது. இது பங்கினப்பள்ளி, பனகனப்பள்ளி, பெனேசன், சஃபேடா என்றும் அழைக்கப்படுகிறது.

';

அல்போன்சோ

இந்த வகைக்கு 15 ஆம் நூற்றாண்டின் போர்த்துகீசிய ஜெனரல் மற்றும் வைஸ்ராய் அஃபோன்சோ டி அல்புகெர்கியின் பெயரிடப்பட்டது. காலனிகளை நிறுவிய போது, புதிய வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர் அறிமுகப்படுத்தினார்.

';

தோதாபுரி

ஹிந்தியில் தோதா என்றால் கிளி. இது சிவப்பு, பச்சை, மஞ்சள் என கிளியின் நிறங்களைக் கொண்டிருக்கும். இது கிளி மூக்கு மாங்காய் என்றும் அழைக்கப்படுகிறது.

';

சிந்துரி

பெண்கள் அணியும் "சிந்தூரை" அதாவது குங்குமத்தை ஒத்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

';

மல்கோவா

இது "பால் கோவா" போல சுவையாக இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது

';

தஷேரி

இது முதன்முதலில் வளர்க்கப்பட்ட தஷேரி (உத்திரப்பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ளது) கிராமத்திலிருந்து இப்பெயர் பெற்றது.

';

லங்கரா

உ.பி.யில் உள்ள வாரணாசி பகுதியைச் சேர்ந்த லங்க்ரா, முடமாக இருந்த ஒரு துறவியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த ரகத்தை தனது சொந்த மண்ணில் முதன்முதலில் அவர் உருவாக்கினார்.

';

சௌஸ்னா/சௌசா

சௌசா போரில் ஹூமாயூனை ஷேர் ஷா சூரி வென்றதை நினைவுகூரும் வகையில், பீகாரில் உள்ள சௌசா என்ற இடத்தையடுத்து இந்த மாம்பழம் பெயர் பெற்றது.

';

ஆம்ரபாலி

பிரபல நடனக் கலைஞரான ஆம்ரபாலியின் பெயர். அவள் வைஷாலியின் அரச தோட்டத்தில் ஒரு மாமரத்தின் அடிவாரத்தில் பிறந்தார் என்று கூறப்படுவதால் அப்பழத்துக்கு இந்த பெயர் வந்தது.

';

ஹிமாயத்

இமாம் பசந்த் அல்லது ஹுமாயுன் பசந்த் என்றும் அழைக்கப்படும் இந்த வகை முகலாய பேரரசர் ஹுமாயூனின் பெயரையிட்டி பெயரிடப்பட்டுள்ளது. ஹிமாயத் மாம்பழங்கள் மிகவும் இனிமையானவை.

';

VIEW ALL

Read Next Story