பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும்.
அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது.
சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம், ஆரோக்கியமாகவும் இருக்கலாம், எடையையும் எளிதாகக் குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் பல பழங்கள் உள்ளன. இவற்றில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பல வைட்டமின்கள் உடை எடையை குறைக்க உதவுகின்றன.
பூசணி, ஆளிவிதை மற்றும் சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு உதவுகின்றன.
ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எடை இழப்புக்கு இது ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைப்பதில் காலை உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது. சத்தான காலை உணவை உட்கொள்ள வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் சாலட் மிக லைட்டான உணவாக கருதப்படுகின்றது. இது எடை இழப்புக்கு ஏற்றது.