’தமிழ் இருக்க இந்தி எதற்கு’ வைரலாகும் ஹேஸ்டேக்

S.Karthikeyan
Jan 25,2023
';

மொழிப்போர் தியாகிகள் தினம்

தமிழ்நாட்டில் இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

';

போராட்டம் தொடங்கியது

இந்தி மொழி திணிப்பை எதிர்த்து 1930-களிலேயே போராட்டம் தொடங்கியது.

';

தங்களின் இன்னுயிரை நீத்தனர்

எந்தக் கட்சியையும் சாராத தாளமுத்து நடராசன் ஆகியோர் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடி தங்களின் இன்னுயிரை நீத்தனர்.

';

மொழித் திணிப்புக்கு எதிராக நடை பயணம்

1938 ஆம் ஆண்டு மணவை திருமலைசாமி தலைமையில் ஏராளமோனார் சென்னையை நோக்கி இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடை பயணம் மேற்கொண்டனர்.

';

மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம்

இவர்கள் பயணம் சென்னையை அடைந்ததும், அன்று மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

';

தமிழ்நாடு தமிழருக்கே

அதில் உரையாற்றிய பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

';

இந்தி மொழிக்கு எதிரான போராட்டம்

1948 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் வெடித்தது.

';

இந்தி மொழி எதிர்ப்பு உச்சம்

1950 மற்றும் 60-களில் இந்த போராட்டம் உச்சத்தை எட்டியது. பலர் இந்தி மொழித் திணிப்புக்காக தங்களின் இன்னுயிரை நீத்தனர்.

';

இந்தி மொழித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி

அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, இந்தி மொழித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

';

மொழிப்போர் தியாகிகள் நாள்

இந்தி மொழித் திணிப்புக்காக போராடியவர்களை நினைவுகூறும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story