மருத்துவ காப்பீடு யாரெல்லாம் எடுக்க வேண்டும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

';

மருத்துவக் காப்பீடு என்பது நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும். அவசர காலங்களில் நமது உடல் நலம் மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கான முழு உத்திரவாதத்தை இது உறுதி செய்கிறது.

';

நிதி பாதுகாப்பு: திடீரென ஏற்படும் பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைகளின் செலவைக் ஈடுகட்ட மருத்துவக் காப்பீடு உங்களுக்கு உதவுகிறது. எனவே, மோசமான தருணங்களில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை மருத்துவ பில்லாக செலுத்த வேண்டிய அவசியமில்லை.

';

மேலும் மருத்துவ செலவுகள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதால், ஒரு நல்ல மருத்துவக் காப்பீட்டை வைத்திருப்பது மிகவும் நல்லது. இது உங்களது சேமிப்பு வீணாகாமல் காப்பாற்றும்.

';

நோய்களை எதிர்த்து போராடலாம்: நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளன. இத்தகைய நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி மோசமான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

';

குடும்ப பாதுகாப்பு: குடும்பமாக இருப்பவர்கள் ஒரு குடும்ப மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசர காலத்தில் பெரிதளவில் உதவும். இந்த காப்பீடு மூலமாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சையளிக்க முடியும்.

';

தொழிலாளர் மருத்துவக் காப்பீடு: சில நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இது எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கி இருக்காது. அல்லது உங்கள் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்காமல் இருக்கலாம்.

';

மருத்துவ பணவீக்கம்: மருத்துவ பணவீக்கம் என்பது வருடத்திற்கு வருடம் 14 சதவீதம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்திற்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற பண வீக்கத்தை எதிர்த்து போராட மருத்துவக் காப்பீடு மிகவும் முக்கியமானது.

';

சேமிப்புகளைப் பாதுகாக்கலாம்: மருத்துவக் காப்பீடு இல்லாமல், திடீரென ஏதோ ஒரு அவசரநிலை காரணமாக மருத்துவமனையை நீங்கள் அணுகும்போது, அது உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கலாம்.

';

இதன் மூலமாக உங்களுடைய சேமிப்பும் காணாமல் போகும், அதேநேரம் சுகாதார செலவுக்காக நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக, எதிர்காலத்திலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே சுகாதார காப்பீட்டால் உங்களது நிதி பாதுகாக்கப்படுகிறது.

';

மருத்துவக் காப்பீட்டில் முதலீடு செய்வது உங்களது நல்வாழ்வு மற்றும் மன நிம்மதியில் முதலீடு செய்வதற்கு சமமாகும். எனவே இன்றே சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து, உங்களது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து மகிழ்ச்சியாக இருங்கள்.

';

VIEW ALL

Read Next Story