மாநில கட்சிகளுடன் கூட்டணி - காங்கிரஸ் புதிய உத்தி கைகொடுக்குமா?

';


காங்கிரஸ் கட்சி கடந்த 2 மக்களவை தேர்தல்களிலும் தோல்வியை தழுவி மத்தியில் ஆட்சியை இழந்தது.

';


அதுமட்டுமல்லாமல் மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்து தன்னுடைய இருப்பை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது.

';


பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது.

';


அதேநேரத்தில் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்திய பிரதேசம் தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.

';


இதனால், 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லையோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழத் தொடங்கியது.

';


இந்த சூழலில் தான் மாநிலக் கட்சிகளோடு வலுவான கூட்டணியை திட்டமிட்டு உறுதி செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

';


இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால் தான் கடந்த இரு மக்களவை தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

';


இப்போது அதனை சரி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவின் கோட்டையாக பார்க்கப்படும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது.

';


இதேபோல், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது காங்கிரஸ்.

';


தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உறுதி என்பதால் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக அணுகுமுறையில் நல்ல மாற்றத்தை பெற்றிருக்கிறது காங்கிரஸ்

';


இதனால் காங்கிரஸ் தொண்டர்களும் புத்துணர்ச்சியை பெற்றுள்ளனர். 2024 தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள இருக்கிறது காங்கிரஸ்.

';


இருப்பினும் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்குமா? என்றால் அதற்காக காங்கிரஸ் இன்னும் களத்தில் கடுமையான பணி செய்ய வேண்டியிருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story