இந்தியாவின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் சில உயிரினங்கள் அவர்களின் வாழ்விடத்தில் மட்டுமே வளர அனுமதி உள்ளது. எனவே அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க முடியாது.
பெரிய கொம்புகளுக்கு பெயர் பெற்ற பிளாக்பக் வகை மான்களை செல்லப் பிராணியாக வளர்க்க அனுமதி இல்லை.
யானைகள் ஒரு காட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. எனவே முறையான அனுமதியின்றி அவற்றை வளர்க்க முடியாது.
நட்சத்திர ஆமைகள் அதன் தனித்துவமான ஓடு வடிவங்களுக்கு பெயர் பெற்றது. இவற்றை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது.
சிறுத்தைகளை இந்தியாவில் செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதி இல்லை.
காட்டின் ராஜாவான சிங்கத்தை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
சிவப்பு பாண்டா அரிய வகை இனம் ஆகும். இவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதி இல்லை.
புலி இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இனமாகும். இவற்றை கொல்வதும், செல்லப்பிராணிகளாக வளர்ப்பதும் குற்றம் ஆகும்.