உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திக்க உள்ளார்.
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
கடந்த ஜூன் மாதம் 99 வயதை எட்டினார் ஹீராபென் மோடி.
ஜூன் மாதம் 99வது பிறந்தநாளில் தனது தாயை பிரதமர் மோடி சந்தித்தார்.
'அம்மா' என்ற தலைப்பில் ஒரு உணர்ச்சிகரமான பதிவையும் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.
கடைசியாக குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்தார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்தார்.