பளபளப்பான சருமத்துக்கு 'சூப்பர்' செமயான 10 டிப்ஸ்

';

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்யை வறண்ட சருமத்தின் மீது தடவி, நன்றாக மஸாஜ் செய்துவிட்டு பின்பு குளிக்க வேண்டும். இதனால், தோலின் வறட்சித் தன்மையும் நீங்கும்.

';

உருளைக் கிழங்கு சாறு

தயிரை நன்கு கலக்கி அதனுடன் உருளைக்கிழங்கை அரைத்துப் பிழிந்து சாறாக்கிக் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால் முக வறட்சி நீங்கும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தை நன்கு அரைத்து, க்ரீம் போல மாற்றி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவடையும்.

';

வெண்ணெய்

வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.

';

மஞ்சள்

தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சேர்த்து பசை போல் ஆக்கி, முகத்தில் தடவி, அது உலர்ந்த பிறகு நன்கு கழுவ வேண்டும்.

';

வெள்ளரி

வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைக்கலாம். 20 முதல் 30 நிமிடங்களில் சருமத்தைப் பளபளப்பாக்கி விடும்.

';

தக்காளி

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இதைச் சாறாக பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் உரியப் பலனை உணர்வீர்கள்.

';

மோர்

தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம்.

';

ஆப்பிள்

ஆப்பிளைத் தோலை நீக்கி பாலில் போட்டுக் கொதிக்க வையுங்கள். கெட்டியாகத் தயிர் போல ஆகிவிடும். நன்றாக ஆறியவுடன் அதை முகத்தில் பூசி, சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு கழுவினால் முகம் பொலிவு பெறும்.

';

VIEW ALL

Read Next Story