ஊற வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 விதைகள்..!

S.Karthikeyan
Jul 21,2024
';


விதைகளில் நம்ப முடியாத சத்துகள் இருப்பது தெரிந்தாலும், அதனை தினசரி மக்கள் எடுத்துக் கொள்வதில்லை.

';


இந்த விதைகளில் செரிமானத்தை மேம்படுத்துவது முதல் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை என பல நன்மைகள் இருக்கின்றன

';


அவற்றை ஊற வைத்து சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். அந்த சத்துகளை கொண்டிருக்கும் 5 விதைகள் இவை தான்.

';

பாதாம்

பாதாம் விதையில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கின்றன. இரவில் ஊற வைத்து காலையில் தினசரி சாப்பிடலாம்.

';

சியா விதைகள்

சியா விதைகள் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றை வளமாக வைத்துள்ளது. ரத்த சர்க்கரை கட்டுப்படுத்துவது, செரிமானத்துக்கும் உதவும் இந்த விதைகளை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

';

ஆளி விதைகள்

ஆளிவிதைகள் நார்ச்சத்து, லிக்னான்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது. மலச்சிக்கலைக் குறைக்கிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

';

பூசணி விதைகள்

பெப்பிடாஸ் என்றும் அழைக்கப்படும் பூசணி விதைகள் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

';

அக்ரூட் பருப்புகள்

அக்ரூட் பருப்புகளில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியது. இதய ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. இதனை ஊற வைத்தே சாப்பிடலாம்.

';

VIEW ALL

Read Next Story