இளநீரில் நிறைய இயற்கையான புத்துணர்ச்சியூட்டும் சத்துக்கள் உள்ளன. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
காலையில் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடிப்பது நீரேற்றமாக இருக்க உதவும்.
புதினா கலந்த நீர் உடலே நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், செரிமானத்திற்கும் உதவுகிறது.
மோர் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இவற்றில் சீரகம் கலந்து குடித்தால் செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
வாழைப்பழம், ஆப்பிள் போன்ற சத்தான பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திகள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
மூலிகை டீ உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ சாப்பிடலாம்.
வெள்ளரியை அப்படியே சாப்பிட்டாலும், தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டாலும் நிறைய சத்துக்களை தருகிறது.