ஜீரா தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரல் செயல்பாட்டை பலப்படுத்துகிறது.
சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கின்றன.
காலையில் சீராக தண்ணீர் குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் அசௌகரியத்தை குறைக்கவும் உதவும்.
சீரகம் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. இவை உடலை மெலிதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.
சீரகம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது மற்றும் பொடுகுக்கு எதிராக போராடுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரகம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் காலையில் சீரகம் கலந்த தண்ணீரை குடிக்கலாம். இவை தெளிவான சுவாசத்தை ஊக்குவிக்கும்.
தினசரி காலையில் சீரக தண்ணீர் குடித்தால் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவும்.