கற்றாழையில் முடிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது.
இவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், பளபளப்பான முடியை பெறவும் உதவுகிறது.
கற்றாழை எண்ணெய் தயாரிக்க கற்றாழை இலை, தேங்காய் எண்ணெய் மற்றும் வாசனைக்காக சில அத்தியாவசிய எண்ணெய்கள் தேவை.
முதலில் கற்றாழையில் இருந்து தோலை உரித்து அதன் ஜெல்லை எடுத்து நன்கு கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கலக்கி வைத்து இருந்த ஜெல்லை அதில் சேர்க்கவும்.
இந்த கலவையை 10-15 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு இரக்கி வைக்கவும்.
கலவை சிறிது ஆறிய பிறகு பாட்டிலில் வடிகட்டி வாசனைக்காக சில அத்தியாவசிய எண்ணெயை சேர்க்கவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.