மாருதி பிரெஸ்ஸாவின் ஆரம்ப விலை ரூ.8.34 லட்சம் ஆகும். இது பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள் 19.89 kmpl மற்றும் CNG வகைகளுக்கு 25.51 km/kg மைலேஜ் கொடுக்கிறது.
டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் ஆகும். இந்த மாடல் கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினுடன் வருகிறது.
நெக்ஸானின் மைலேஜ் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து 17.01 kmpl முதல் 24.08 kmpl வரை மாறுபடும்.
ஹூண்டாய் வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என மூன்று மாறுபட்ட எஞ்சின் தேர்வுகளுடன் வருகிறது.
இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.5 கிமீ முதல் 23.4 கிமீ வரை மாறுபடும். இதன் விலை ரூ.7.94 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
கியா சோனெட் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின், 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவற்றுடன் வருகிறது.
ரூ. 8 லட்சத்தில் இருந்து விற்பனை ஆகும் இந்த கார் 18.7 kmpl முதல் 22.3 kmpl வரை மைலேஜ் தருகிறது.
XUV 3XO விலைகள் ரூ.7.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இது இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது.
மஹிந்திரா XUV 3XO லிட்டருக்கு 18.06 முதல் 21.2 கிமீ மைலேஜ் தருகிறது.