கல்லீரல் பாதிப்பை தவிர்க்க கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..!
உடலில் இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு கல்லீரல். இது சுமார் 500 முக்கியமான வேலைகளை செய்கிறது.
நச்சுத்தன்மையை நீக்குவது முதல் எல்லா உணவையும் வளர்ச்சிதை மாற்றத்துக்குள்ளாக்குவது வரை கல்லீரல் தான் செய்கிறது
இது கொலஸ்ட்ரால் அளவை சரிசெய்து, புரதங்களை உருவாக்குகிறது. கொழுப்பை உறிஞ்ச உதவுகிறது. உடலுக்கான சர்க்கரையை சேமிக்கிறது
ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதும் கல்லீரல் தான். ஆனால் இது பாதிக்கப்பட்டால் உடலின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும்
கல்லீரல் பாதிக்கப்படும்போது உடலில் நச்சுகள் குவிந்துவிடும், உங்கள் உணவை ஜீரணிக்க முடியாது மற்றும் மருந்துகள் உங்கள் உடலை விட்டு வெளியேறாது
ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி ஆகியவை கல்லீரலின் வைரஸ் நோய்கள்.
இதை தடுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினாலும், பெரியவர்களும் போட்டுக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான உடலுறவு, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்து சரியாக சாப்பிடுங்கள்.
உடல் பருமனை தவிர்த்தால் கொழுப்பு கல்லீரல் வராது.