நாளையும் கோளையும் ஆளும் அம்மனை வழிபடுவோம்! எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?

';

தெய்வ வழிபாடு

வழிபாடு என்பது இந்துக்களின் பாரம்பரியம், அதிலும் அம்மன் வழிபாடு என்பது மகத்துவம் வாய்ந்தது. எந்த கிழமைகளில் அம்மனுக்கு விரதம் இருந்தால் என்ன பலன் என தெரிந்துக் கொள்வோம்

';

பார்வதி

ஞாயிற்றுக்கிழமை நாளன்று அன்னை பார்வதி தேவியை வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். சிவபத்னியின் கருணையால் மனதில் உள்ள அச்சங்கள் நீங்கும்

';

திங்கட்கிழமை

சந்திரனை பிறையாய் சூடிய சிவனின் மனைவி உமையை திங்களில் வழிபட்டால் தடைகள் நீங்கி வளமாய் வாழலாம். ஆரோக்கியமான வாழ்வைப் பெறா திங்கட்கிழமை அம்மன் வழிபாடு உதவும்

';

செவ்வாய்க்கிழமை

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாக செவ்வாய்க்கிழமைகளில் அன்னை வழிபாடு செய்வது நல்லது. திருமணத்தடை அகலவும், செவ்வாய் தோஷம் நீங்கவும் செவ்வாய்க்கிழமை அம்மன் வழிபாடு உதவும்

';

புதன்கிழமை

அறிவுக்கூர்மை பெருகவும், கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கவும் புதனுக்கு உரிய நாளில் சரஸ்வதி தேவியை வழிபடலாம்

';

வியாழக்கிழமை

குருவின் நாளான வியாழக்கிழமைகளில் படிப்பு, தொழில் தொடர்பான எந்தவொரு வேண்டுதலையும் அன்னை துர்க்கை நிறைவேற்றி வைப்பார்

';

வெள்ளிக்கிழமை

அன்னை லட்சுமியை சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்க வேண்டும். வாழ்வில் சுபிட்சத்தையும் செல்வ வளத்தையும் அன்னை கொண்டு வந்து சேர்ப்பார்

';

சனிக்கிழமை

வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்க, அம்மனை சனிக்கிழமைகளில்வழிபடலாம். அம்மனை சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் பெறலாம்

';

VIEW ALL

Read Next Story