அலட்சியம் வேண்டாம்.. இவைதான் வைட்டமின் பி12 இன் ஆரம்ப அறிகுறிகள்

Vijaya Lakshmi
Jan 17,2024
';

நரம்பு பிரச்சனை

வைட்டமின் பி12 குறைபாடு ஆரம்ப கால அறிகுறிகள் பொதுவாக இலேசானதாக இருந்தாலும் வைட்டமின் பி12 கடுமையான குறைபாடு நரம்பு மண்டலத்துக்கு நிரந்தர சேதத்தை உண்டு செய்யும்.

';

சோர்வு

வைட்டமின் பி12 உடலில் செல்கள் செயல்பாட்டுக்கு அவசியம். இதன் குறைபாடு சாதாரண இரத்த சிவப்பணு உற்பத்தியை குறைக்கலாம். இது ஆக்ஸிஜன் செல்வதை பாதிக்கலாம். இதனால் நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம்.

';

உணர்வின்மை

கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை அல்லது எரியும் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வை இவை அளிக்கலாம்.

';

வீக்கம்

வைட்டமின் பி 12 குறைபாடு இருக்கும் போது நாக்கில் வலி மற்றும் வீக்கம் காரணமாக இருக்கும். இது பி12 குறைபாட்டால் உண்டாகலாம்.

';

செரிமானம்

வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது அது செரிமான பாதையை பாதிக்கும். இது வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல், வீக்கம், வாயு, பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டு செய்யும்.

';

​மனநல குறைபாடு

​வைட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். இதனால் மனதில் ஒருவித மூடுபனி இருக்கும். பொதுவாக வயதானவர்கள் இந்த பக்கவிளைவுகளை அதிகம் கொண்டிருப்பார்கள்.

';

பார்வைக் கோளாறு

பார்வைக் கோளாறுகள் மற்றும் பார்வை நரம்பு சேதம் சிகிச்சை அளிக்கப்படாத பி12 குறைபாட்டால் ஏற்படலாம்

';

VIEW ALL

Read Next Story